காங்கேசன்துறை காணிகள் அடுத்த மாதம் விடுவிக்கப்படும் – மேஐர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க!
Wednesday, March 29th, 2017
யாழ்.மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வசமிருக்கின்ற, பொது மக்களுக்குச் சொந்தமான காணிகள், படிப்படியாக விடுவிக்கப்படும். அத்துடன், காங்கேசன்துறையின் சில பகுதிகள் அடுத்த மாதம் விடுவிக்கப்படும்என மேஐர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியான செயற்பட்ட மேஐர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்கவின் பிரியாவிடை நிகழ்வு, யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை (27) நடைபெற்றது.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய மகேஸ் சேனாநாயக்க, தொடர்ந்து தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாணத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இதுவரையில் விடுவித்திருக்கின்றோம். தொடர்ந்தும் நிலங்களையும் விடுவிக்க உள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என்றார்.
Related posts:
|
|