காங்கேசன்துறை கடலில் 9கோடி பெறுமதிமிக்க ஹெரோயின் மீட்பு!

Friday, May 12th, 2017

 

காங்கேசன்துறை கடற்படை தலைமைப்பீடத்தில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் கடலில் வீசப்பட்டிருந்த நிலையில் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்து வந்த பொதி ஒன்றினை கைப்பற்றியிருந்தனர்.அதனை பிரித்து சோதனையிட்ட போது ஹெரோயின் போதைப்பொருள் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

கடற்படைதளத்திற்கு கொண்டு வந்து மேலதிக பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்ட போது இது 100% ஹெரோயின் என கண்டறியப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இலங்கை மதிப்பீட்டில் 9கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட ஹெரோயின் வடக்கு கடற்பரப்பு ஊடாக கொழும்பிற்கு எடுத்து செல்வதற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


1500 அரச வாகனங்கள் மாயம்! - நிதி அமைச்சர்
வீதிப் போக்குவரத்து விதி மீறல் குறித்த அபராதத் தொகையில் மாற்றமில்லை - நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க!
தொழில் அலுவலர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
நியமனம் வழங்கப்படாததை எதிர்த்து வடக்கில் புதிய அதிபர்கள் வழக்குத் தாக்கல்!
யாழ்.தொண்டமானாறு அணைக்கட்டு புதுப்பிப்பு!