கவனயீனத்தால் கோண்டாவிலில் விபத்து : இளம் குடும்பஸ்தர் மயிரிழையில் உயிர் தப்பினார்!

Wednesday, August 31st, 2016

கே.கே. எஸ் வீதி கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை(30) பிற்பகல் இடம்பெற்ற கார்- மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் கார் பலத்த சேதங்களுக்கு உள்ளானது. எனினும், தெய்வாதீனமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ். சுன்னாகத்தில் தனது அலுவலகக் கடமைகளை முடித்து விட்டு  கே.கே.எஸ். வீதி வழியாக மோட்டார்ச் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி இளம்  குடும்பஸ்தர் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அப் பகுதியில் மருந்தகமொன்றை நடத்தி வரும் வைத்தியர் தீடீரெனப் பிரதான வீதியை நோக்கிச் செலுத்தியுள்ளார். குறித்த வைத்தியர் கவனயீனமாக வாகனத்தைச் செலுத்திய காரணத்தால் சற்றும் எதிர்பாராத வகையில் மோட்டார்ச் சைக்கிளுடன் மோதுண்டது. சம்பவத்தில் வைத்தியர் செலுத்தி வந்த காரின் முன்பகுதி கடுமையான சேதங்களுக்கு உள்ளானது. எனினும், காரைச் செலுத்திய  வைத்தியருக்கோ, மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 50 வயதான குடும்பஸ்தருக்கோ காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் இளம் குடும்பஸ்தர் செலுத்திச் சென்ற மோட்டார்ச் சைக்கிளுக்கும் சேதங்கள் எதுவுமில்லை.

தன் மீது தான் தவறுள்ளது என்பதை முதலில் வைத்தியர் ஏற்க மறுத்த போதும் பின்னர் சம்பவ இடத்தில் ஒன்று கூடிய பொதுமக்கள் வைத்தியர் மீது தான் தவறுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியதையடுத்து அவர் தம்மீதான தவறை ஏற்றுக் கொண்டுள்ளார். இதனையடுத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டாம் என வைத்தியர் குடும்பஸ்தரை அன்பாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரும் பெருமனதுடன் அதற்கு உடன்பட்டுள்ளார்.

இதேவேளை , மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்தி வந்த இளம் குடும்பஸ்தர் மெதுவாக வந்த காரணத்தாலேயே உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

unnamed (1)

Related posts: