களு கங்கை பெருக்கெடுக்கலாம்- எச்சரிக்கை!

தற்போது நிலவும் அதிக மழை காரணமாக களு கங்கை பெருக்கெடுக்கும் மட்டத்திற்கு வந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கங்கையின் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அந்த நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதேவேளை, இரத்தினபுரி – எஹெலியகொட பிரதேசத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கொழும்பு – அவிசாவளை பிரதான வீதி, புவக்பிட்டிய பகுதி நீரில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் ஒரு அடி உயரத்துக்கு பாதையில் வெள்ள நீர் ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த பாதையின் ஊடாக சிறிய வாகனங்களால் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.அதேபோன்று வத்தளை நகரின் பல பகுதிகளிலும், கொலன்னாவை – நாகஹமுல்லை பிரதேசத்திலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் களனி – வனவாசல பகுதியிலும் சில வீடுகள் நீரில் மூழ்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|