கல்வி அமைச்சர் மற்றும் சில அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு!

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய பரிசோதனை உற்பத்தி உதவி அதிகாரிகள் சங்கம் தயாராகிறது. இதனை அந்த சங்கத்தின் முதன்மைச் செயலாளர் ஜகத்குமார தெரிவித்துள்ளார்.
15 கோடி ரூபா நட்டஈடு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே 1ஆம் திகதி தமது மே தின கூட்டத்தை பத்தரமுல்ல-அப்பே கம வளாகத்தில் நடாத்த தடை விதித்தமைக்கு எதிராகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சிகரெட் விற்பனைக்கு புதிய சட்டம்!
முல்லைத்தீவில் 4764 பேர் தனிமைப்படுத்தலில்!
இலங்கையின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்த சிங்கப்பூரிடமிருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் டொலர் பெறுமதிய...
|
|