கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்த 3225 ஆசிரியர்களுக்கு நியமனம்!

Tuesday, September 13th, 2016

கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்த 3225 பேருக்கு அடுத்த மாதம் 4ம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.. இதில் 1046 தமிழ்மொழி ஆசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இது தொடர்பான வைபவம் அலரிமாளிகையில் குறித்த தினத்தன்று காலை 10.00 மணிக்கு இடம் பெறவிருப்பதாக கல்வி அமைச்சின் கல்வி சேவைகள் உள்ளக மேலதிக செயலாளர்  தெரிவித்துள்ளார்.

இவர்களது நியமனம் அந்த மாதம் முதல் நடைமுறைக்கு வருமென்றும் குறிப்பிட்ட அவர் ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவும் தேசிய மற்றும் மாகாண சபை பாடசாலைகளில் இவர்கள் சேவையில் அமர்த்தப்படுவார்கள் என்றும் கூறினார். பின்தங்கிய பாடசாலைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும்.

இதேவேளை, 2017ம் ஆண்டுக்கு கல்வியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இம்மாதம் 30ம் திகதி வரையில் இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும். இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

10 peeta

Related posts: