கல்கிஸ்ஸ பொலிஸ் விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கைது!
Tuesday, June 21st, 2016இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்கிஸ்ஸ பொலிஸ் விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணொருவரிடம் 20,000 ரூபா இலஞ்சம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது. காணி பிரச்சினை தொடர்பான முறைப்பாடொன்றில் குறித்த பெண்ணுக்கு சாதகமாக நடந்து கொள்ள குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரி ஒரு இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டது.
இதற்கு முன்னரும் இந்த பொலிஸ் பொறுப்பதிகாரி 50,000 ரூபாவை கப்பமாக பெற்றுள்ளார். நேற்று மாலை தெஹிவளை பிரதேசத்தில் வைத்து மேலும் 20,000 ரூபாவை இலஞ்சமாக பெற முயன்ற போதே விசேட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.
Related posts:
அடுத்த வருடம்முதல் அனைத்து நிறுவனங்களும் இலாபமீட்டும் நிறுவனங்களாக உருவாக்கப்பட வேண்டும் – துறைசார் ...
புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் - உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்...
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் - இதுவே நுகர்வோருக்கும் நன்மை...
|
|