கற்கைநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

Thursday, June 28th, 2018

இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் கல்வியாண்டில் பின்வரும் தொழிற்கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். நீரில் வளர்ப்பு தொழில்நுட்பவியலாளர்(Nஏஞ-4), நீரில் வளர்ப்பு மற்றும் நீரியல் வள முகாமைத்துவ டிப்ளோமா(Nஏஞ-5), கடலக மாலுமி(Nஏஞ-4), ஆழ்கடல் சுழியோடி(Nஏஞ-3), கடலக வரைபடம் வாசித்தலும் செய்மதி தொடர்பாடலும்(புPளு) ஆகிய பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. படகினைச் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்ள விரும்புவர்களுக்கு கடலக மாலுமி பயிற்சி நெறியானது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

மேற்படி பயிற்சி நெறிகளுக்கு க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் தோற்றியவர்கள் மற்றும் துறைசார் அனுபவமுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் இக்கற்கை நெறிகளை பூர்த்தி செய்பவர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள கூடிய வகையில் தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கப்படும்.

ஆனைத்து கற்கைநெறிகளும் கட்டணமின்றி நடத்தப்படுவதுடன் இக்கற்கை நெறிகளை கற்க விரும்புவர்கள் உரிய விண்ணப்பப் படிவங்களை எமது அலுவலகத்தில் பெற்று 15.07.2018 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு 021 738 8188, 071 834 9073, 077 375 5063 எனும் இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என இலங்கை சமுத்திர பல்கலைக்கழக யாழ் பிராந்திய நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.எஸ்.கிரு~;ணலிங்கம் அறிவித்துள்ளார்.

Related posts:


ரஷ்ய விமான விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு...
நாடளாவிய ரீதியில் புகையிரத நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு - பொது மக்களின் பாதுகாப்புக்காக 32 புகைய...
நாடுகளுக்கிடையிலான அதிகாரச் சண்டைகளில் ஈடுபடுவதற்கு இலங்கை விரும்பவில்லை - நியூயோர்க்கில் ஜனாதிபதி ...