கறிமுருங்கைச் செய்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!

Friday, May 11th, 2018

யாழ்ப்பாணக் குடாநாட்டில் விவசாயிகள் மேற்கொண்ட கறிமுருங்கைச் செய்கை மூலம் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. தற்போதைய கடுமையான வறட்சி, வெப்பநிலை போன்ற காலநிலைக்கு ஏற்றவாறு கறிமுருங்கைகள் அதிகளவில் காய்த்துள்ளன என்று விவசாய திணைக்களம் தெரிவித்தது.

குடாநாட்டில் பல்வேறு இடங்களிலும் பரவலாக செய்கையாளர்கள் இந்தச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அவை அறுவடை செய்யப்படுகின்றன. சந்தைகளுக்கு அவை தாராளமாக வந்து சேர்கின்றன. இதே சமயம் வன்னிப் பிரதேசத்தில் இருந்தும் பெருமளவு கறிமுருங்கைக் காய்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுகின்றன என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.

Related posts: