கரையோர பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டிடங்கள் அகற்றப்படும்!

Thursday, August 4th, 2016

 

நாட்டில் உள்ள கரையோர பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றவுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை நகரை அண்மித்த கரையோரங்களில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றும் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பம்பலப்பிட்டி,தெஹிவளை, கல்கிஸ்சை மற்றும் இரத்மலானை உள்ளிட்ட பல பகுதிகளில் கரையோரத்தை அண்மித்து சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்கள் அகற்றப்பட்டுள்ளதாக பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். அனுமதிப்பத்திரம் இன்றி கட்டடங்களை நிர்மாணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: