கரையோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Monday, May 3rd, 2021

இந்தியாவில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குள் ஊடுருவதைத் தடுக்க, கரையோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்து மக்கள் இலங்கைக்குள் ஊடுருவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென் இந்தியாவில் இருந்து இந்தியர்கள் இலங்கைக்குள் கடல் வழியாக ஊடுருவியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், கடற்படையினர் கரையோரப் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: