கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 3,114 குடும்பங்களுக்கு மின்சாரம் தேவை!

Thursday, October 27th, 2016

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 3,114 குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டிய தேவையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்தில் மீள்குடியேறிய 13,213 குடும்பங்களில் இதுவரை 7,555 குடும்பங்கள் மின்சார வசதிகளைப் பெற்றுள்ளன. 1,257 குடும்பங்களுக்கான இணைப்பு வசதிகள் மேங்கொள்ளப்பட்டுள்ள போதும் வீட்டிற்கான மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. அத்துடன் 1,857 குடும்பங்கள் வாழும் பகுதிகளுக்கான மின்சார இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இவ்வாறு 3,114 குடும்பங்கள் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்நிலையில் அரசினூடாக கிடைத்த நிதியீட்டங்களினூடாக முதலாவது கட்டடத்தில் 493 கடுமபங்களுக்கும் இரண்டாவது கட்டடத்தில் 59 குடும்பங்களுககும் மூன்றாவது கட்டடத்தில் 40 குடும்பங்களுக்கும் மின்னிணைப்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மீள்குடியோற்ற அமைச்சினது நிதியுதவியடன் 130 குடும்பங்களுக்கான மின்சார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் 1,065 குடும்பங்களுக்கு கடனடிப்படையில் மின்னிணைப்புக்களை வழங்குவதற்கான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

electric-wire

Related posts: