கரைதுரைபற்று பிரதேசத்தில் 42ஆயிரத்து 47 வீடுகள் தேவை!

Wednesday, January 18th, 2017

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுரைபற்று பிரதேச செயலர் பிரிவில் இவ்வாண்டு பல்வேறு தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளதாக பிரதேச செயலகத்தின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரைதுரைபற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள 46 கிராம அலுவலர் பிரிவுகளிலும் சுமார் 42ஆயிரத்து 55பேர் மீள்குடியேறியுள்ளனர். இந்நிலையில் 4ஆயிரத்து 47 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் தேவைப்படுவதுடன் 1061 வீடுகள் புனரமைக்க வேண்டியள்ளது. மேலும் 1174 குடும்பங்களுக்கு மலசல கூட வசதிகள் 170 கிணறுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும்.561.45 கிலோ மீற்றர் நீளமான வீதி புனரமைக்க வேண்டும். 2853 குடும்பங்களுக்கு வாழ்வாதார வசதிகள், 9 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 212 தற்காலிக வீடுகள் என்பன அமைத்துக் கொடுக்க வேண்டடிய தேவையுள்ளதாக விரதேச செயலகத்தின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

056

Related posts: