கருணா தலைமையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு!

Monday, June 19th, 2017

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் வவுனியாவில் மக்கள் சந்திப்பு நடைபெறவிருந்த இடத்தில் கூடிய சிலர்  அவருக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

வவுனியா கிடாச்சோறி பொது நோக்கு மண்டத்தில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் மக்கள் சந்திப்பிற்கு இந்த மண்டபத்தை வழங்க முடியாது என மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.அதனையடுத்து கிடாச்சோறி கிராமத்தில் உள்ள அவரின் ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts: