கருணாவுக்கு விடுதலை!

Monday, October 30th, 2017

விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான், 9 கோடி ரூபாய் பெறுமதியான அதிசொகுசு வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(30) குறித்த இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான குறித்த வாகனத்தை, கடந்த ஆட்சியின் போது அவர் பிரதி அமைச்சராக இருந்த வேளையில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Related posts: