கப் ரக வாகனமும் – மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து – கொடிகாத்தில் ஒருவர் பலி!

\யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் கொடிகாமம் – கச்சாய் வீதியை சேர்ந்த 31 வயதுடைய யோகேஸ்வரன் நிலாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கப் ரக வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Related posts:
முச்சக்கரவண்டிகளை மீற்றர் கட்டணமில்லாமல் இயக்க முடிவு!
தேசிய வெசாக் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் - மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் வித...
பாவனையாளர் நீர் கட்டணம் ரூ. 7,500 மில்லியன் நிலுவையில் ஜனாதிபதி முன்பாக சபையின் தலைவர் தகவல்!
|
|