கபாலிக்கு எதிர்ப்பு: சென்னையில் ரஜினியின் உருவ பொம்மையை எரிப்பு!!

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் ரஜினிகாந்த் குரல் கொடுக்காததைக் கண்டித்து, நாளை வெளிவர இருக்கும் கபாலி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வேளச்சேரியில் இன்று ரஜினிகாந்த்தின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்று கூறி, நடிகர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்து ஏழை, எளியோர், நடுத்தர சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளச்சேரி காந்திநகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு குரல் கொடுக்கவில்லை எனவும், அரசியலுக்கு வருவது போன்று பேசி இளைஞர்களை குழப்பி வருவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ரஜினிகாந்த் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரி முழக்கமிட்டனர். அப்போது ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்த அவர்கள், கபாலி திரைப்படத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தினர்.
நாளை மறுநாள் ‘கபாலி’ வெளியாகவுள்ள சூழ்நிலையில், இந்த போராட்டம் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
|
|