கனரக வாகனத்தில் சிக்குண்டு சாரதி பரிதாபமாக பலி!

Monday, August 8th, 2016

துணுக்காய் பகுதியில் குளக்கட்டுப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனரக வாகனம் விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தட்டுவன்கொட்டியைச் சேர்ந்த 33 வயதான ச.உமாகாந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துணுக்காய் பகுதியிலுள்ள பட்டங்குளத்தின் குளக்கட்டுப் புனரமைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கனரக வாகனம் புரண்டதில், அதன் சாரதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: