கண்ணைத் தோண்டிய கரடி!

மன்னாரில் கரடியின் கொடூரத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது – மன்னார் கொண்டாச்சி சிலாத்துறையில் கடந்த புதன்கிழமை இரவு 10.45 மணயளவில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கபுல் ஹசீம் இல்லியாஸ் (வயது 55) எனும் 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கரடிக்குடிக்கு உள்ளாகியுள்ளவராவார்.
இரவு வேளை வீட்டின் பின்புறம் சத்தம் கேட்டதும் குறித்த நபர் யானை என நினைத்து துரத்துவதற்குச் சென்றுள்ளார். இவ் வேளை அங்கு மறைந்து நின்ற கரடி குடும்பஸ்தரைக் கடித்துள்ளது.
இதில் ஒரு கண் பாதிப்படைந்து முகத்தில் மோசமான காயங்களுடன் காணப்பட்ட பிரஸ்தாப குடும்பஸ்தர் உடனடியாக அயலரின் உதவியுடன் சிலாவத்தை மன்னார் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்தும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படின்றது.
Related posts:
|
|