கண்காணிப்புச் சபை உறுப்பினர்களின் இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது – அமைச்சர் கபீர் ஹசீம்!
Sunday, January 7th, 2018
ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் கண்காணிப்புச் சபை உறுப்பினர்களின் இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
புதிய கண்காணிப்புச் சபையொன்றை நியமிப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அஜித் டயஸ், கண்காணிப்புச் சபையின் உறுப்பினர்களான சானக்க டி சில்வா, ஜோசப் ராஜன் பிரிட்டோ, நிரஞ்சன் டி சில்வா, தேவ ஆதித்ய, மஹிந்த ஹரதாச மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரகித ஜயவர்தன ஆகியோரின் கையொப்பத்துடன் நிறுவனத்தை மீள் வியூகப்படுத்துவதற்கான திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக இராஜினாமா செய்வதற்கு தயாராகவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது
Related posts:
ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு – இன்றுமுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் ...
உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் இயந்திரங்களாக மாறியுள்ளது வங்காள விரிகுடா பிராந்திய பொருளாதாரங்கள...
டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை - அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயல...
|
|