கண்களின் விழிவெண்படலத்தை அகற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
Thursday, September 1st, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஆயிரம் கண்களின் விழிவெண்படலத்தை அகற்றும் வேலைத்திட்டம் இன்று யாழ்ப்பபாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் மூன்றாம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக ஜனாதிபதி செயலகத்தினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சமூகத் தொண்டு எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த வேலைத் திட்டம் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
யாழ். போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் எம். மலரவன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தை, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பவனாந்தராஜா ஆரம்பித்து வைத்தார். மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த சிகிச்சை முகாமின் மூலம் நூற்றிற்கு மேற்பட்டவர்களுக்கு விழிவெண்படலத்தை அகற்ற திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
|
|