கணவரைக் காணவில்லை: மனைவி முறைப்பாடு!

Thursday, October 20th, 2016

மலேசியாவிலிருந்து வந்து வவுனியாவில் உள்ள நண்பரை அழைத்துச் வரச் சென்ற குடும்பத்தலைவரை கடந்த 6 நாள்களாக வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 கடந்த மார்ச் மாதம் நண்பரின் குடும்பத்தினர் சாவகச்சேரிக்கு வந்திருந்தனர். அவர்களை அழைத்துச் செல்ல கடந்த 11ஆம் திகதி இலங்கைக்கு வந்து சாவகச்சேரி கெருடாவில் தங்கியிருந்த ம.துகில்வண்ணன் (வயது-29) என்பவர் கடந்த 13ஆம் திகதி வவுனியாவில் உள்ள நண்பரை அழைத்து வரச் சென்றார். எனினும் 6 நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி தெரிவித்தார்.

complaint-stamp-375x250

Related posts: