கணவரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மனைவி படுகாயம் 

Sunday, May 7th, 2017

கணவரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மனைவி படுகாயமடைந்த சம்பவம் யாழ். வரணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர் மேற்கொண்ட தாக்குதலிலேயே மனைவி காயமுற்ற நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மது போதையில் வீட்டிற்கு வந்த கணவர் தன்னுடன் முரண்பட்ட நிலையில் தன்னைத் தாக்கினார் என மனைவி பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: