கணவனை இழந்த குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்த கிரிக்கெட் வீரர்!

Tuesday, March 21st, 2017

மாத்தளை பகுதியில் வறிய குடும்பம் ஒன்றுக்கு, இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் வீடொன்றை நிர்மாணித்து கொடுத்துள்ளார்.

மாத்தளை அலகவத்த பிரதேசத்தை சேர்ந்த நிர்மலா பத்மகுமார மெனிக்கே என்ற பெண்ணுக்கு இவ்வாறு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் கடந்தாண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். 11 மற்றும் 7 வயதுகளில் மகள்கள் இருவர் உள்ளனர். இவர்களின் கல்வி நடவடிக்கைக்காக தற்காலிகமாக வசித்த வீடு மற்றும் காணியை அடகு வைத்து ஐந்தரை இலட்சம் பெற்றுள்ளார்.

எனினும் எதிர்பார்த்ததனை போன்று அடகு வைத்த வீட்டினை அவரால் மீட்டிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தனக்கு உதவுமாறு ஊடகங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதன் பின்னர் கிரிக்கெட் வீரர் டில்ஷான், அவர்கள் வாழ்வதற்கு பொருத்தமான வீடொன்றை நிர்மாணிக்க 25 இலட்சம் நிதியுதவி வழங்கினார். இதன்மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டினை டில்சான் நேற்று திறந்து வைத்தார்.

Related posts: