கட்டுநாயக்கவில் சீகா பரிசோதனை  ஆரம்பம்!

Tuesday, March 22nd, 2016
சீகா தொற்று தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்பாலித மஹிபாலவால் ஆரம்பித்து வைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக உள்நுழையும் பயணிகளை பரிசோதனை செய்யவும்இ இவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை குறித்த நோய் தொடர்பில் யாராவது அடையாளங் காணப்பட்டால் பொரல்லை வைத்திய நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் I.D.H  மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து  இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலமாக சீகா வைரஸ் தொற்றுப்  பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த பரிசோதனைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுகாதார அமைச்சின் அலுவலக கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Related posts: