கட்டாக்காலி கால்நடைகளைப் பிடிக்க யாழ்ப்பாண மாநகரசபை நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலிகளாகத் திரியும் கால்நடைகள் பிடிக்கப்படும். அவை உரிமையாளர்களிடம் மீள வழங்கப்படும் போது. தண்டப் பணம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் என்பன அறவிடப்படும் இந்தச் செயற்பாடுகள் ஜீன் 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என யாழ்.மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
மாநகர கட்டளைச் சட்டத்தின் அத்தியாயம் 252இன் பிரிவுகள் 84 (1), (2), (3), (4) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி உரிமையாளரின் பராமரிப்பின்றி கட்டாக்காலியாக வீதிக்கு இடையூராக அலைந்து திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவது சம்பந்தமான பொது மக்களுக்கான பகிரங்க அறிவித்தல் வழங்கப்படுகின்றது.
ஜீன் முதலாம் திகதி தொடக்கம் கட்டாக்காலியாக வீதிக்கு இடையூறாக அலைந்து திரியும் கால்நடைகள் யாழ்ப்பாணம் மாநகர சபையால் பிடிக்கப்படும் அவற்றைக் கட்டி வைக்கும் வசதி ஏற்படுத்தப்படும். அவற்றுக்குத் தேவையான நீர் மற்றும் தீவனம் வழங்கப்படும். மாநகர சபைக் கட்டளைச் சட்டம் 84 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி உரிமையாளர் 10 நாட்களுக்குள் கால்நடைகளை மீளப் பெற்றுக்கொள்வதாயின் உரிய தண்டப்பணம் நாள் ஒன்றுக்கான வரிகள் உள்ளடங்கலாக 2ஆயிரம் ரூபா அறிவிடப்படும் அத்துடன் கால்நடைகளை மாநகர சபை பராமரித்த போது ஏற்பட்ட தீவனத்துக்கான செலவினமும் அறிவிடப்படும் கால்நடை பிடிக்கப்பட்டு 10 நாட்களின் பின்னரா 11ஆம் நான் அவற்றை ஏலத்தில் விற்பனை செய்வதற்கான விளம்பரம் பத்திரிகைகளில் வெளியிடப்படும் பிடிக்கப்பட்ட 12அவது நாள் கால்நடைகள் விற்பனை செய்யப்படும்
ஏலநாள் மற்றும் குறித்த நேரத்திற்கு முன்னராக உரிமையாளர் கால்நடையை மீளப்பொறுப்பேற்றால், தண்டப்பணம் தீவனத்துக்கான பணம் மற்றும் பத்திரிகை விளம்பரம் செய்தமைக்கான பணம் ஆகியன செலுத்தப்பட வேண்டும் மீளப் பெறத் தவறினால் கால்நடைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படும் ஏலத்தொகை மாநகரசபையின் வருமானக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றுள்ளது.
Related posts:
|
|