கட்டாக்காலி கால்நடைகளால் அழிவடையும் நெற்செய்கை – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேலணை விவசாயிகள் கோரிக்கை!

Friday, December 16th, 2016

கடந்த ஆண்டைவிட அதிகளவான ஏக்கரில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ளோம். கட்டாக்காலி கால்நடைகளால் தொடர்ந்தும் அழிவு ஏற்படுகின்றது. அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் என பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

வேலணைப் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதிலேயே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அல்லைப்பிட்டி, மண்டைத்தீவு, புங்குடுதீவு, வேலணை, நயினாதீவு போன்ற பிரதேசங்களில் கட்டாக்காலி கால்நடைகளின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. கடந்த காலங்களை விட இந்த ஆண்டு அதிகளவிலான ஏக்கரில் நெற்செய்கையும் மேற்கொண்டுள்ளோம். கட்டாக்காலிகளால் எமது நெற்செய்கை பாதிப்படைகின்றது. அதைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் மக்களும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DSCN2811-1024x768

Related posts: