கடையில் நின்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிப்பு!

Wednesday, October 12th, 2016

நவாலி கிழக்கு சங்கரத்தை வீதியில் உள்ள பலசரக்குக் கடை உரிமையாளரின் தங்கச் சங்கிலி நேற்று அபகரிக்கப்பட்டது. இச் சம்பவம் நேற்று சங்கரத்தை வீதியிலுள்ள கடை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்களில் வந்த இருவர் குறித்த கடை உரிமையாளரான 50வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் முகவரி கேட்டு பாசாங்கு காட்டி அப்பெண் கழுத்தில் அணிந்திருந்த 2 ½ பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடினர். இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

19215_newsthumb_thali

Related posts: