கடுவெல நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டது!

Friday, May 20th, 2016

மழை வௌ்ளம் காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கடுவெல நுழைவாயில் தொடர்ந்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிவேக வீதியின் கடவத்தை மற்றும் கொட்டாவைக்கு இடையில் கட்டணமின்றி பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதியின் மேற்பார்வை மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க தெரிவித்தார்.

கடுவெல, ஹங்வெல்ல மற்றும் பியகம பாதைகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதால், அதிவேக வீதியின் கடுவெல பரிமாற்றப் பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே தொடர்ந்தும் மழை பெய்து வருகின்ற நிலையில் அதிவேக வீதியூடாக தங்களால் கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறும் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: