கடும் வறட்சி: குடிதண்ணீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் – சாவகச்சேரி நகரசபை !

Wednesday, March 8th, 2017

சாவகச்சேரி நகர சபையால் வழங்கப்படும் குழாய் மூலமான குடிதண்ணீர் விநியோகிக்கும் திட்டம் மட்டுப்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை கருத்திற் கொண்டு குடிதண்ணீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட அளவில் சுழற்சி முறையில் காலை, மாலை, வேளைகளில் வழங்கப்படவுள்ளது. என சாவகச்சேரி நகர சபையின் செயலாளர் கா.சண்முகதாசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

சாவகச்சேரி நகரசபை வளாகத்தில் 2005 ஆம் ஆண்டு நகரப் பகுதிக்கான குடிதண்ணீர் விநியோத் திட்டத்துக்கென அரச சார்பற்ற நிறவனமொன்றால் தண்ணீர் தாங்கி, வீதி குழாய்கள் பொருத்தல் போன்றவை அமைக்கப்படன. சபை எல்லைக்குட்பட்ட யாழ்ப்பாணம் வீதி, கண்டி வீதி, கச்சாய் வீதி, டச்சு வீதி. அஞ்சலக வீதி, புகையிரத நிலைய வீதி, தனங்ளப்பு வீதி, நகரை அண்மிக்கும் சாலை பேருந்து நிலைய வீதி ஆகியவற்றுடன் பொதுச் சந்தையின் அனைத்து விற்பனை பகுதிகளிலும் குழாய்கள் பொருத்தப்பட்டு தினமும் 24மணிநேரமும் வழங்கப்படுகின்றது,

கடந்த வருடம் மழை வீழ்ச்சி குறைவாக இருந்ததால் கிணற்றின் நீர் மட்டம் குறைந்ந வண்ணம் உள்ளது இந்த நிலை நீடிக்குமாயின் அடுத்துவரும் மாதங்களில் குடி தண்ணீர் விநியோகத் திட்டம் முற்றாக நிறுத்தப்படும் அபாயம் காணப்படுகின்றது.

அதனால் குடிதண்ணீர் விநியோகம் காலை மாலை வேளைகளில் சுழற்சி முறையில் வழங்கப்படவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால் மின் பாவனையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. சபை எல்லைக்குட்பட்ட சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் வீதி விளக்குகளின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றார்

Related posts: