கடும் வரட்சி : 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

Saturday, May 6th, 2017

நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலையினால் 14 மாவட்டங்களைச் சேர்ந்த பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரண்டு இலட்சத்து 75ஆயிரத்து 778  குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சத்து 11 ஆயிரத்து 406 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்ட மக்கள் வறட்சியினால் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கம்பஹா மாவட்டத்தில் உள்ள 66  ஆயிரத்து 921 குடும்பங்களைச் சேர்ந்த 2இலட்சத்து 90 ஆயிரத்து 342பேர்  ; பாரியளவிலான குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

Related posts: