கடும் காற்று : வவனியாவில் 28 வீடுகள் சேதம்!

Saturday, April 15th, 2017

வவுனியாவில் மினி சூறாவளியுடன் கூடிய காலநிலை ஏற்பட்டதன் காரணமாக 28 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஈரப்பெரியகுளம், களுகுன்னம்மடுவ மற்றும் அலுத்கம பிரதேசங்களில், நேற்று மாலை வீசிய கடும் காற்றினாலேயே குறித்த வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், இந்த கடும் காற்று காரணமாக மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஏ9 பாதையின் போக்குவரத்தும் இரண்டு மணிநேரம் தடைப்பட்டிருந்தது.

இதன்போது இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்து நிலைமையை வழமைக்கு கொண்டு வந்தனர்.இதேவேளை, அண்மையில் தெற்கிலுப்பைக்குளம், காத்தார் சின்னக்குளம் பகுதியில் ஏற்பட்ட மினி சூறாவாளியால் 40 வீடுகள் வரை சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: