கடற்றொழிலாளர்கள் போராட்டம்!

Tuesday, May 30th, 2017

பருத்தித்துறை இறங்குதுறை விஸ்தரிப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடற்றொழிலாளர்களால் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த விஸ்தரிப்பு பணிகளுக்காக சுமார் 285 கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் எனவே அபிவிருத்திக்காக பருத்தித்துறை இறங்குதுறையில் ஒதுக்கப்பட்ட காணியை மாத்திரம் அபிவிருத்திசெய்யுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

பருத்தித்துறை முனையில் பேரணியாக ஆரம்பித்த அவர்கள் பிரதேச செயலத்துக்கு சென்று தங்களின் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் கையளித்தனர்

Related posts: