கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்!

Friday, June 29th, 2018

நாடு பூராகவும் கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் இடைக்கிடை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை மற்றும் அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரை கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 50 -55 கிலோ மீற்றர் வேகத்தில் அதிகரித்து வீச கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரை கடற் பிரதேசங்களில் மழை பொழியும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: