கடற்படை பேச்சாளரின் பிணை கோரிய விண்ணப்பம் நவம்பரில் பரிசீலனை!

Wednesday, September 27th, 2017

முன்னாள் கடற்படை பேச்சாளர் டீ.கே.பீ. தசநாயகவின் பிணை கோரிய விண்ணப்பம் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி பரிசீலனை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தமக்கு பிணை கோரி, குற்றஞ் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த பிணைக் கோரிய மனு இன்று(26) மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படை பேச்சாளர் தசனாயக்க உள்ளிட்ட 6 கடற்படை சிப்பாய்களுக்கு பிணை வழங்குமாறு இதன் ஊடாக கோரப்பட்டுள்ளது.

எனினும் இதன்போது மன்றில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசாங்க சட்டத்தரணி, சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் சம்பவம் குறித்த சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என தெரிவித்துள்ளார்.

2008, 2009 ஆண்டு காலப்பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டு அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: