கடன்திட்டங்கள் மூலம் 1266 பயனாளிகளுக்கு நிதியுதவி!

Screen-Shot-2015-09-14-at-3.56.31-PM Thursday, October 5th, 2017

விவசாயிகள், சிறிய மற்றும் மத்தியதர கைத்தொழில் துறையினர் , சுயதொழில் முயற்சியாளர்கள் ஆகியோரை இலக்காகக்கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு கடன்திட்டங்கள் மூலம் 1267 பயனாளிகளுக்கு 6517 மில்லியன் ரூபா கடனுதவியை அரசாங்கம் வழங்கியுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இதுதொடர்பான தகவல்களை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.