கடந்த 68 வருடங்களில் நாட்டில் 1,557 பேருக்கு உச்சபட்ச தண்டனை விதிப்பு!

Friday, August 12th, 2016

நாட்டில் கடந்த 68 வருடங்களில், 1,557 பேருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று  ஊடகத்துறை அமைச்சரும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவுமான கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் நேற்று (11) தெரிவித்துள்ளார்.

1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 2016 ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரையிலான காலத்தினுள் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அவர்களில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை ஜயந்த சமரவீர எம்.பி கேட்டிருந்தார்.

குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த ஆளுங் கட்சியின் பிரதம கொறடா, இக்காலப்பகுதியில் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1557 ஆகும். அவர்களில் 187 பேருக்கு, பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related posts: