கடந்த 5 வருடத்தில் வெளிநாடு செல்ல முயன்ற 6000 பேர் கைது!
Friday, April 7th, 2017கடந்த ஐந்து வருடத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்லமுயன்ற சுமார் ஆறாயிரம் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும்ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து நேற்றைய தினம் நாடாளுமன்றில் அமைச்சர்உரையாற்றினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர்,கடந்த ஐந்து வருடத்தில் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாடு செல்லமுயன்ற 6176 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அதிகளவானோர் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா நோக்கி சென்றவேளையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.பெருமளவானோர் இந்தோனேஷிய கடற்பரப்பில்வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர்.அதேவேளை போலி ஆவணங்களை சமர்ப்பித்து பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மன்செல்ல முற்பட்டவர்கள் பலரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது
Related posts:
|
|