கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 913 பேர் கைது – பொலிஸ் தெரிவிப்பு!
Monday, June 7th, 2021கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மேல் மாகாணத்திற்கு நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் சோதனைகள் இடம்பெற்றதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்போது 2 ஆயிரத்து 348 வாகனங்களில் பயணித்த 4 ஆயிரத்து 504 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதில் தனிமைப்படுத்தல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை மீறியதற்காக 54 வாகனங்களில் பயணித்த 107 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
நான்காம் மாடிக்கு மேல் கட்டடம் நிறுவ அனுமதியளிக்க யாழ்ப்பாண மாநகர சபைக்கு அதிகாரம் கிடையாது !
இரட்டை பிரஜா உரிமை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்தமாதம் ஆரம்பம்!
நடைமுறைக்கு வந்தது பேருந்து கட்டண அதிகரிப்பு!
|
|