கடந்த 24 மணிநேரத்தில் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான முழு விபரங்கள்!

Tuesday, June 8th, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 646 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் அவர்களில் 2 ஆயிரத்து 610 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 36 பேருக்கும் நேற்று (07) கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, நாட்டில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 7 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 45 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர். இந்நிலையில், தொற்றுறுதியான 30 ஆயிரத்து 145 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts:


கொரோனா தொற்றை தேசிய பொறுப்பாக கருதி உதவுங்கள் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை!
இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்படுகின்றனர். அதற்கு எந்த வகையிலும...
இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறிய விவகாரம் - ஹமில்டன் ரிசர்வ் வங்கி நியூயோர்கில் தாக்கல் செய்த வழக...