கடந்த வருடத்தில் புதுக்குடியிருப்பில் அதிகரித்த சட்டவிரோத மணல் அகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலேயே அதிகளவான சட்ட விரோத மணல் அகழ்வு கடந்த 2018 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாகப் பொலிஸ் புள்ளி விபரம் தெரிவி;க்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மணல் ஏற்றல் கடந்த 2018 ஆம் ஆண்டு 847 சம்பவங்களாகப் பதிவாகியுள்ளன.
இதனூடாக 908 கியூப் மணல், மற்றும் கிரவல் மண் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் 26 சம்பவங்களும் மாங்குளத்தில் 257, புதுக்குடியிருப்பில் 336, ஒட்டுசுட்டானில் 73, முள்ளியவளையில் 58, வெலிஓயாவில் 13, மல்லாவியில் 84 என முல்லைத்தீவு மாவட்டத்தில் 847 சட்டவிரோத மணல் அகழ்வு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இவற்றுக்கான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
தென்பகுதிக்கு ஏற்றுமதி : கடலுணவுகளின் விலைகளில் சடுதியான மாற்றம்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பு தொடர்பில் இந்தியாவுடன் புதிய உடன்படிக்கை - அமைச்சர்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்தவகை குருதிக்கும் தட்டுப்பாடு – குருதி வழங்கமாறு ...
|
|