கடந்த இருவருடத்தில் 2658 Kg போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது –அமைச்சர் சாகல ரத்னாயக்க!

Tuesday, December 6th, 2016
கடந்த இருவருட காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் போது 2658 கிலோ கிராம் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகான அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதாவினதும் அவரது சகாக்களினதும் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய வாய் மூலமான கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர்இந்த வியடங்களை குறிப்பிட்டார். 2014 ஆம் ஆண்டு 23,325 சுற்றிவளைப்புகளில் 312 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. கஞ்சா தொடர்பாக 43,798 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 19,644 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

78 கிலோ 78 கிராம் ஹஸீஸ் கைப்பற்றப்பட்டன. 2015ல் 46 கிலோ ஹெரோயினும் 6569 கிலோ கஞ்சாவும் 774 கிராம் கொகையினும் 2 கிலோ 218 கிராம் ஹஸீஸும் கைப்பற்றப்பட்டன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

2593099ca49786a9926aa95dc7f52dbd_XL

Related posts: