கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரயில் விபத்துக்களில் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

2016ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ரயில் விபத்துக்களில் 347 பேர் உயிரிழந்துள்ளனர் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
பயணித்து கொண்டிருக்கும் ரயிலில் இருந்து விழுந்தமையினால் ஏற்பட்ட விபத்தில் இதுவரையில் 58 பேர் உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதையில் இடம்பெற்ற விபத்தில் 14 பேரும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டவர்களில் 31 பேரும் இதில் அடங்குவர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் ரயில் விபத்துக்களில் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தொலைபேசி பாவனையினால் ஏற்பட்ட விபத்துக்களே அதிகமாக உள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சதொச வழக்கிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் விடுதலை!
இலங்கையில் சுமுகமான அதிகார மாற்றத்தை உறுதி செய்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும் ...
இலங்கையில் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள் - மின்சார நுகர்வோர் சங்கத்தி...
|
|