கடந்தாண்டு 1560,10 மி.மீ.மழை இவ்வாண்டு 700 மி.மீ. மட்டுமே!

Saturday, January 21st, 2017

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந் 2016ஆம் ஆண்டில் 1560,10 மி.மீ.மழை பதிவாகிய போதும் 700 மி.மீ மழை வீழ்ச்சி கடந்த மே மாதத்தில் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சி காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் 1560,10 மி.மீ.மழை பதிவாகியுள்ள போதும் 740 மி.மீ கடந்த மே மாதத்தில் பதிவாகியது. எனினும் இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகள் மற்றும் சிறுபோக செய்கையின்னை என்பவற்றால் இரணைமடுக் குளத்தில் நீர் சேமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டில் 1870,90 மி.மீ.மழை வீழ்ச்சியும் 2011ஆம் ஆண்டில் 1822.40மி.மீ மழை வீழ்ச்சியும் 2012 ஆம் ஆண்டு 1295.10மி.மீ மழை வீழ்ச்சியும் 2013ஆம் ஆண்டில் 1234.10 மி.மீ மழை வீழ்ச்சியும் 2014 ஆம் ஆண்டில் 1853.70 மி.மீ மழை வீழ்ச்சியும் 2015 ஆம் ஆண்டில் 2096.40 மி.மீ மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2

Related posts: