கடந்தகாலத்தில் எட்டப்பட்ட தீர்க்கமான முடிவுகள் போல் தற்போதைய ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் முடிவுகள் ஏன் எடுக்கப்படுவதில்லை? பொது அமைப்பகளின் கேள்வி

Monday, March 14th, 2016

கடந்த காலத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் மக்களதும் பிரதேசத்தினதும் நலன்சார்ந்து திடமானதாக எடுக்கப்பட்ட முடிவுகளைப்போல் தற்போது கூட்டப்படுகின்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் முடிவுகள் எட்டப்படுவதில்லை. இதனால் தற்போது வடபகுதியில் மக்கள் தமது சேவைகளையும் தேவைகளையும் பெற்றுக்கொள்வதில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டவண்ண உள்ளனர். மக்களதும் பிரதேசத்தினதும் அபிபிருத்திக்காக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுவே அபிவிருத்திக்கு தடையாக உள்ளது என பொது அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் கருத்துக்கள் அடங்கிய செய்தி இன்றைய (14) தேசிய நாளிதழ்களான வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. குறித்த செய்தியின் தொகுப்பை எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம்.

யாழ்ப்­பாணம் மற்றும் கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளிலும் அம் மாவட்­டங்­களின் பிர­தேச செயலர் பிரி­வு­க­ளிலும் கூட்­டப்­ப­டு­கின்ற ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டங்கள் வெறும் தனி நபர் பெரு­மைக்­கா­கவும் கட­மைக்­கா­கவும் மாத்­தி­ரமே கூட்­டப்­ப­டு­வதைப் போல் கூட்டப்­பட்டு முடி­வுகள் எதுவும் எட்­டப்­ப­டாத நிலையில் வெறும் அறிக்­கைகள் கோரப்பட்டு கூடிக் கலை­வ­தா­கவே இருக்­கி­றது. இந்த நிலை மாற்­றப்­பட்டு, கடந்த காலங்களில் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தைப்­போன்று பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் மற்றும் முடி­வுகள் எட்­டப்­ப­டக்­கூ­டிய வகையில் அவை செயற்­ப­டு­வதே அர்த்தம் உள்­ள­தாக அமையு­மென பொது அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் தெரி­விக்­கின்­றனர்.

இவ் விடயம் தொடர்பில் ஈ.பி.டி.பி. விடுத்துள்ள செய்தியில், கடந்த காலங்­க­ளின்­போது பிர­தேச ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்­டங்­களை நடத்­தும்­போது பிரச்­சி­னைகள் இனங்காணப்­பட்டு, அவற்­றுக்­கான தீர்­வுகள் மற்றும் முடி­வுகள் உட­னுக்­குடன் எட்டப்பட்டன.

சில பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் அறிக்­கைகள் கோரப்­பட்டு கூடிய விரைவில் எட்டப்பட்­டன. எந்­த­வொரு பிரச்­சினை குறித்தும் தங்­களால் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வினைத் தர முடி­யாது என்றோ, மத்­திய அரசும், மாகாண சபை­யும்தான் பிரச்சினைகளுக்­கான தீர்வைத் தரு­மென்றோ இக் கூட்­டங்­க­ளின்­போது பிரச்­சி­னை­களைத் தட்டிக் கழித்­தது கிடை­யாது. முத­ல­மைச்சர் விக்கினேஸ்­வரன் அப்­போது இணைத் தலைவ­ராக செயற்­பட்­டி­ருக்­கின்றார். எனவே அவ­ருக்கும் இந்த விடயம் நன்கு தெரியும்.

ஆனால், இப்­போது, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வுகள் எதுவும் எட்­டப்­ப­டாமல் வெறும் அறிக்கைகள் மாத்­திரம் கோரப்­பட்டு வரு­வ­தா­கவும், பிரச்­சி­னை­களை தம்மால் தீர்க்க முடி­யாது, பிரச்­சி­னை­களை மத்­திய அர­சுக்கும் மாகாண சபைக்கும் எடுத்துச் சொல்லத்தான் தாங்கள் இருக்­கிறோம் என சில இணைத் தலை­வர்கள் கூறு­வ­தா­கவும், பிரச்­சி­னை­களை எடுத்துக் கூறும் மக்­களை அடக்கி, கருத்து கூற வாய்ப்­ப­ளிக்­காது வருவதா­கவும் பொது அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் தெரி­விக்­கின்­றனர்.

பிர­தேச ஒருங்­கி­ணைப்புக் குழுக் கூட்டம் என்­பது அப் பிர­தேச பிரச்­சி­னை­களை ஆராய்ந்து அப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை, முடி­வு­களை எட்­டு­வ­தா­கவே கடந்த காலங்­களில் செயற்­பட்டு வந்­தன. இதற்­கென தற்­போது மாகாண சபையைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் அதன் முதல்­வரும், மத்­திய அரசை பிர­தி­நி­தித்­துவப் படுத்தும் வகையில் ராஜாங்க அமைச்சர் ஒரு­வரும், இந்த அர­சுக்கு இணக்க அர­சியல் என்ற வகையில் ஆத­ரவு தெரி­வித்­து­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஜனா­தி­ப­தி­யினால் நியமிக்கப்பட்டுள்ளனர். முத­ல­மைச்சர் கூறு­வதை போல் சம அந்­தஸ்­துள்­ள­வர்கள் இல்லா­த­வி­டத்தும் இவர்கள் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­ட­வர்கள் என்ற வகையில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எட்டுவதில் தடைகள் இருக்கப்போவதில்லை. எனினும், அதற்கான ஆற்றல், திறமை, அக்கறை என்பன இருந்தால் இவர்களால் நிச்சயமாக அவ்வாறான தீர்வுகளை, முடிவுகளை எடுக்க முடியும். ஆனால், இவர்கள் அவ்வாறான முயற்சிகளை எடுக்காமல் தட்டிக் கழித்தே வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி வீரகேசரி,தினக்குரல்)

2

Related posts: