கடத்தப்பட்ட வர்த்தகரின் மனைவி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

கிளிநொச்சி நகரில் நேற்று முன்தினம் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ள இளம் வர்த்தகர் ரதீஸின் மனைவி சர்மிளா ரதீஸ் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டம், இடைக்குறிச்சி, வரணியைச் சொந்த இடமாகக் கொண்ட வர்த்தகரான ரதீஸ்(35) நேற்று முன்தினம் நண்பகல் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.குறித்த வர்த்தகர் தனது வீட்டிலிருந்து அச்சகத்துக்குச் சென்றுகொண்டிருக்கும்போதே இடையில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டார்
குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவர் தொடர்பான விசாரணைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் குறித்த வர்த்தகரின் மனைவி நேற்று மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளார்.
Related posts:
தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடும் மக்களின் வயிற்...
60 வயதிற்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை - உள்நா...
சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் புதிய பிரதமர் – பல்வேறு நாடுகள் உதவிக்கரம்!
|
|
பிரிவினைவாதம் தோன்றியதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும் – ஜனாதிபதி தெ...
இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வெளிப்படையாக பரிந்துரைத்து வருகிறது - வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ...
ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தால் இன்றுமுதல் மரண தண்டனை - போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவிப்பு!