கஞ்சா மற்றும் சுருட்டுக்கள் வைத்திருருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்கு அபராதம்!

Saturday, July 2nd, 2016

கஞ்சா மற்றும் சுருட்டுக்கள் வைத்திருருந்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுக்குத் தலா-9 ஆயிரம் ரூபா அபராதமாக விதித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(30) உத்தரவிட்டார்.

கோப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் கஞ்சா சுருட்டினை வைத்திருந்த குற்றச் சாட்டில் கடந்த புதன்கிழமை(29) கைது செய்யப்பட்டதுடன் அன்றைய தினமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது மறு நாள் வியாழக் கிழமை வரை  சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் , குற்றப் பத்திரத்தைக் கோவையிடுமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் குற்றப் பாத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது மேற்படி அபராதத் தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Related posts: