கஞ்சா கலந்த மாவாப் பாக்கு வைத்திருந்த குற்றச் சாட்டில் 17 வயது  மாணவன் கைது !

Thursday, March 24th, 2016

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் கஞ்சா கலந்த மாவாப் பாக்கு வைத்திருந்த குற்றச் சாட்டில் யாழ்ப்பாணம் நகரப் பகுதியைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் க.பொ .த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவனொருவனை கடந்த செவ்வாய்க்கிழமை (22) யாழ்ப்பாணம் இரகசியக் குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் ஓட்டுமடப் பகுதிக்கு சிவில் உடையில் சென்ற பொலிஸார் சந்தேகநபரான மாணவனைக் கைது செய்தனர். இதன் போது குறித்த மாணவனிடமிருந்து 50 கிராம் நிறையுடைய கஞ்சா கலந்த பாக்கினையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மாணவனிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: