கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய நிர்மாணப் பணிகள் பூர்த்தி!

Tuesday, November 22nd, 2016

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக நெடுந்தீவு பங்குத் தந்தை ஏ.ஜே.ஏ. ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார். யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில், தீவக மறைக்கோட்ட குருக்களினுடைய பங்குபற்றலில் நெடுந்தீவு மக்களினுடைய பிரசன்னத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த ஆலயத்தின் திருவிழா நடைபெற்ற வேளையில், இந்தியா – இலங்கை மக்கள் ஒன்றாகக்கூடி, அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த புதிய ஆலயம் கட்டப்படவுள்ளதாக நெடுந்தீவு பங்குத்தந்தை ஏ.ஜே.ஏ. ஜெயரஞ்சன குறிப்பிட்டார். இந்த வருடம் மே மாதம் 9ஆம் திகதி யாழ்.மறைமாவட்ட குருமுதலவர் அருட்தந்தை யோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளாருடைய தலைமையில் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடற்படையினரின் நிதியுதவியுடன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தியடைந்துள்ளதாக நெடுந்தீவு பங்குத் தந்தை ஏ.ஜே.ஏ. ஜெயரஞ்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

10398029_502526153220256_6067072251650155498_n

Related posts: