ஓய்வூதிய கொடுப்பனவிற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம்!

Thursday, July 27th, 2017

இலங்கை கடற்படையினரது  சம்பளம் மற்றும் ஓய்வுதிய கொடுப்பனவுக்காக உத்தியோகபூர்வ இணையத்தளம்  ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடற்படை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த நிகழ்வில்கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணரத்ன இதனை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்துள்ளார்.

இதன் இணைய முகவரி ‘pay.navy.lk’ ஆகும். இதன்மூலம் கடற்படையினர் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் போன்ற விடயங்கள் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்த நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் பொருட்கள் மற்றும் சேவைகள் ரியர் அட்மிரல் நிஹால் பிரனாந்து, கடற்படை தளபதியின் செயலாளர் மற்றும் கடற்படை செயலாளர் பணிப்பாளர் நாயகம் , கடற்படை இயக்குனர் ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related posts: